பயிர் பாதுகாப்பு :: சக்கரைவள்ளி கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்

கருப்பு அழுகல் நோய் :

அறிகுறிகள்

  • கருப்பு அழுகல் நோயின் முதல் நிலை அறிகுறியாக, கிழங்கு சிறியதாகவும், உருண்டை வடிவத்திலும், சிறிது குழிவிழுந்தது போல் கரும் புள்ளியுடன் காணப்படும்
  • கரும்புள்ளிகள் பெருக்கம் அதிகரிக்கும். கரும் பச்சையிலிருந்து கருமை நிறத்தில் ஈரபதநிலையில் காணப்படும் மற்றும் உலர்ந்த நிலை பொழுது சாம்பல் நிறத்தில் தோன்றும், புள்ளிகளின் உள்ளே சிறிய, கரு நிறத்தில் பூஞ்சான அமைப்புகள் அடர் இலைகளையுடைய திறந்த கண் போன்று தோன்றும் நீளமான கழுத்துப் பகுதியுடன் காணப்படும். இவ்வகை அழுகல் நோய் உறுதியாகவும் மற்றும் ஆழுமாகவும் காணப்படும்
  • திசுகளை தாக்கக்கூடிய பூஞ்சான அல்லது நுண்ணுயிரிகள், கிழங்கின் அடிப்பாகத்தில் கரும் புள்ளிகளாகவும் மற்றும் இந்த கரும் பகுதிகள் நாளடைவில் வேர்பகுதியை தாக்கிவிடும்.
  • நிறம் மாறிய திசுப் பகுதி கசப்பாக இருக்கும். இறுதியில், முழு வேர் பகுதியும் அழுகிவிடும். அறுவடையின் போது வேர் பகுதி நோயின்றி காணப்படும், ஆனால், கிடங்குகளில் மற்றும் சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் போது அழுகிவிடும்

கட்டுப்பாடு :

  • கரும்பு அழுகல் நோயை கட்டுப்படுத்த, ஊடுபயிராக பயிரிடுவதால் நோயை கட்டுப்படுத்தலாம்
  • விஷக்கிருமிகளை நீக்கிய நாற்றங்காலை சுத்தமான இடத்தில் பயிரிடவும்
  • நோய்யற்ற செடிகளின், தண்டுகளை வெட்டி அதனினை வேறொரிடத்தில் பதியம் வைத்து வளர்ச்சியை பெருக்கலாம்
  • நோய்யற்ற கிழங்குகளை, உடனடியாக அறுவடை செய்ய வேண்டும்
  • அறுவடைக்கு பின் பூஞ்சான் மருந்தைத் தெளிக்கவும்
  • கிழங்குகளை கழுவுதலோ மற்றும் பொதிகளாகவோ செய்தால் கருப்பு அழுகல் நோய்களுக்கு அறிகுறிகளாகும்
  • சுத்தம் செய்த இயந்திரங்கிளல் உள்ள அழுகியவை பயிர்களை தாக்க நேரிடும்
  • இயந்திரங்களை கழுவி சுத்தமாகவும் மற்றும் பூஞ்சான் மருந்து தெளிக்கவும்
  • கிடங்குகளில் புகை உண்டாக்கியவாறு அமைக்க வேண்டும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015